நடிகைக்கு மீண்டும் கொரோனா

பிரபல இந்தி நடிகை பாருல் சவுத்ரி. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

பாருல் சவுத்ரிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பாருல் சவுத்ரி கூறும்போது, “எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது கஷ்டமாக தெரியவில்லை. தற்போது 2-வது முறை கொரோனா தொற்று ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். உடம்பு வலி, தலை வலி இருக்கிறது. சோர்வாக உள்ளது. உடம்பில் தெம்பே இல்லை. வயிற்றுப்போக்கும் உள்ளது. எனது அம்மா, அப்பா. சகோதரிக்கும் கொரோனா தொற்று உள்ளது. அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறோம். ஒரு முறை கொரோனா வந்தால் மீண்டும் வராது என்று இருக்காதீர்கள். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றார்.

—-

தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் லூசிபர், வைரஸ், லூகா, தீவடி, கோதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

டோவினோ தாமசுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டோவினோ தாமஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. நான் இப்போது தனிமையில் நலமாகவே இருக்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எல்லோரும் பாதுகாப்புடன் இருங்கள்” என்று கூறியுள்ளார்.

இதுபோல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபல இந்தி நடிகர் அஷுதோஷ் ராணாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் தமிழில் ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் தவணை போட்டபிறகு நடிகர் செந்தில், நடிகை நக்மா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts