மன்னிப்பு கேட்ட -2 வது கணவர்

2 வது கணவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து கொடுத்த புகாரை சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா வாபஸ் வாங்கிக்கொண்டார்.

பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா(வயது 39). இவர், நடிகர் முரளி நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது நடிகை ராதா, சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், லோகையா தெருவில் வசித்து வருகிறார்.

நடிகை ராதாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா (44) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவை, நடிகை ராதா 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அவர்கள் ஆர்.ஏ.புரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

வசந்தராஜா, நடிகை ராதாவுடன் கடந்த 1½ ஆண்டுகளாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அத்துடன் நடிகை ராதாவின் நடத்தையில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் இருந்து மகளை பார்க்க வந்த ராதாவின் தயாரிடமும் அவரது நடத்தை தொடர்பாக வசந்தராஜா புகார் கூறினார்.

ஆனால் அவர், தனது மகள் ராதாவை கண்டிக்காமல் வசந்தராஜாவை திட்டியதாகவும், இதில் ஆத்திரமடைந்த வசந்தராஜா, ராதாவின் தாயை அடிக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து தனது 2-வது கணவரான வசந்த ராஜா தன்னை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடிகை ராதா விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரிடம் வசந்தராஜா கூறியதாவது:-

நான், திருவான்மியூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றி ராதாவுக்கு தெரியும். அவருடன் நெருங்கி பழகுவதற்காகவே திருவான்மியூரில் இருந்து வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியிட மாறுதல் பெற்று வந்தேன்.

ராதாவுடன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தேன். அப்போது ராதா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நான், முதல் மனைவியை முறையாக விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்ய முடியாது என்றேன்.

ஆனால் அவர், என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். சட்டரீதியான பிரச்சினைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். அவரது வற்புறுத்தலின் பேரிலேயே அவரது வீட்டில் வைத்து அவரை திருமணம் செய்துகொண்டேன்.

இதற்கிடையில் ராதா, தனது பழைய நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை கண்டித்தேன். ஆனால் அதற்கு ராதா முறையாக பதில் அளிக்கவில்லை.

மேலும் எனது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எனக்கு தெரியாமல் எடுத்து ராதா தனது கணவர் வசந்தராஜா என அவரது ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பெயரை மாற்றிக்கொண்டார். அந்த ஆவணங்களை வைத்து என்னிடம் தெரிவிக்காமல் ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றையும் சமீபத்தில் வாங்கி உள்ளார். இதேபோல என்னிடம் இருந்து பலமுறை பணத்தை பெற்றுக்கொண்ட ராதா, தொடர்ந்து என்னை ஏமாற்றி வந்தார். இவ்வாறு சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, கூறியதாக தெரிகிறது.

ஆனால் 2-வது கணவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதால் புகாரை திடீர் என நடிகை ராதா வாபஸ் பெற்றுக்கொண்டார்.

Related posts