இந்தியில் சூர்யா படம்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டனர். தெலுங்கு மொழியிலும் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. அபர்ணா பாலமுரளி நாயகியாக வந்தார். பரேஷ் ராவல், ஊர்வசி, மோகன்பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். சூரரைப்போற்று படத்தை சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் இறுதி பட்டியலில் இடம்பெறாமல் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தை அடுத்து இந்தி மொழியிலும் வெளியிடுகிறார்கள். இந்தியில் உடான் என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளனர். இந்தியில் சூரரைப்போற்று அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். ஏற்கனவே சூர்யா இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். எனவே சூரரைப்போற்று படம் இந்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Related posts