இந்த வருடம் திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்

கொரோனாவால் தியேட்டர்களில் கூட்டம் வருமா என்ற சந்தேகத்தில் பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வராமல் முடக்கி வைத்தனர்.

ஆனால் விஜய்யின் மாஸ்டர் திரையரங்குகளில் வெளியாகி லாபம் பார்த்ததால் முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் இந்த வருடம் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அந்த வரிசையில் விஷால் நடித்துள்ள சக்ரா படத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதியும், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தை 19-ந்தேதியும் ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் படத்தை மார்ச் 26-ந்தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை ஏப்ரல் 4-ந்தேதியும், திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் மே 13-ந்தேதியும், கார்த்தியின் சுல்தான் படம் ஏப்ரல் 2-ந்தேதியும், விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் 14-ந்தேதியும், சிம்புவின் மாநாடு படம் மே 13-ந்தேதியும், யஷ் நடித்துள்ள கே.ஜி.எப் படம் ஜூலை 30-ந்தேதியும் திரைக்கு வரும் என்று தெரிகிறது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண் நடித்து 5 மொழிகளில் வெளியாகும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை அக்டோபர் 13-ந்தேதியும், ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை நவம்பர் 4-ந்தேதியும், சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை டிசம்பர் 24-ந்தேதியும் திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

Related posts