பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் உருக்கம்

தேர்தலில் தனியாக நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும்? என பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுவில் கலந்து கொண்டவரிகளிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று சிறப்பு பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புபொதுக்கூழு கூட்டம் இணைய வழியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது:-

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள். அந்த அமைப்பை போல் பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் .

கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான். பாமக கோட்டையான தர்மபுரியில் அன்புமணி தோல்வியடைந்தற்கு காரணமும் பாமகவினர் சரியாக தேர்தல் வேலை செய்யாததே . தேர்தலில் தனியாக நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும்?

அரசியல் மாற்றம் என்ற எனது நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமோ? என்னுடைய வாழ்க்கையில் அரசியல் மாற்றத்தை காண முடியாதா என டாக்டர் ராமதாஸ் உருக்கமாக பேசினார்.

Related posts