நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது.வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் சிட்னியில் உள்ள துறைமுக பாலப் பகுதியில் வாணவேடிக்கை நடைபெற்றது. கொரோனா தொற்று அபாயம் காரணமாக மக்கள் அப்பகுதியில் திரளாகக் கூடி நேரில் காண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2021 புத்தாண்டை வரவேற்று வாண வேடிக்கையுடன் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சிட்னி, மெல்போன் போன்ற நகரங்கள் வண்ணவிளக்குகளால் ஜொலிக்கிறது. உலகிலேயே இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி நகரம் அடங்கிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரிஜிக்லியான், சிட்னி நகரமையப் பகுதியில் வசிப்பவர்கள் புத்தாண்டைக் கொண்டாட தலா 10 விருந்தினர்களை அழைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் இப்பகுதிக்கு வருவதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக பாலப் பகுதியில் ஒவ்வொரு புத்தாண்டு இரவு வேளையிலும் நடைபெறும் வாண வேடிக்கை உலகப்புகழ் பெற்றதாகும். இதை நேரில் காண சுமார் 10 லட்சம் மக்கள் வரை கூடுவார்கள். கொரோனா தொற்று அபாயம் காரணமாக மக்கள் அப்பகுதியில் திரளாகக் கூடி நேரில் காண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts