சமூக வலைதளங்களில் நடிகர் விஜயின் மாஸ்டர் பட புதிய போஸ்டர்கள்

மாஸ்டர் படத்தின் புதியப் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்துக்கு இசை – அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா எனற கேள்வி எழுந்தது.

ஆனால் தயாரிப்பு நிறுவனமோ மாஸ்டர் படத்தை திரையரங்கிலே வெளியிட விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்திலிருந்து புதியப்போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் அதனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Related posts