எமது அரசாங்கத்துக்கு அரசியல் பழிவாங்கும் எண்ணம் கிடையாது

எமது அரசாங்கம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளாது என பாதுகாப்பு செயலாளர் நாயகம் ஜெனரல் கமல் குணரத்ன கண்டியில் வைத்து தெரிவித்தார்.
புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் , விசாரணைகளால் உறுதிப்படுத்தப்பட்டவர்களைத் தவிர, பலர் இன்று சிறைவாசம் அனுபவிப்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் எனவும் இந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிடடார். மேற்று முன்தினம் (29) கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு செயலாளர் நாயகம் அங்கு நடைபெற்ற மத வழிபாடுகளுக்கு பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாடுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்: ஜனாதிபதியோ பிரதமரோ, அரசாங்கமோ எந்தவொரு அரசாங்க அதிகாரிகளையும் அரசியல் பழிவாங்ககளுக்கு உட்படுத்தும் எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது எனவும் அதனை அவர்கள் ஒருபொழுதும் எதிர்பார்க்கவில்லை என்றார். கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கலுக்குள்ளாகி ஏதேனும் அநீதி நடந்திருப்பின் அது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் தற்பொழுது கொவிட் உடல்களை தகனம் செய்வது அல்லது அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், இந்த விஷயத்தை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்குமாறு கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ நிபுணர்கள் குழுவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிடடார்.

சுகாதார நிபந்தனைகளுக்கு ஏற்ப பல கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள், இருந்தபோதிலும் வழக்கம் போல் சுதந்திரமாக பயணிக்க இயலாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எம்.ஏ.அமீனுல்லா

Related posts