அலைகள் வாராந்த பழமொழிகள் 01.01.2021

01. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எங்கே போக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான விடயம்.

02. அடுத்த பத்தாண்டுகளில் நீங்கள் எங்கே இருக்கப்போகிறீர்கள் ? இப்போது தெரியாவிட்டால் எங்கே போவதென்று தெரியாது பேருந்து நிலையத்தில் நின்றவன் கதைதான்.

03. நீங்கள் முதலாவது அடியை வைக்க முன் எங்கே போகிறீர்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

04. எப்போதுமே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்படும்வரை எதுவுமே நடைபெறுவதில்லை.

05. உயிர்வாழ காற்று எப்படி முக்கியமோ அதுபோல வெற்றிக்கு இலக்கு முக்கியம்.

06. வெற்றி பெற்ற யாருமே இலக்கு குருட்டுத்தனமாக வெற்றி பெற்றதில்லை.

07. நீங்கள் செய்யும் காரியம் உங்களை முழுமையாக ஆட்கொள்ளவில்லை என்றால் நீங்கள் எதையும் சாதிக்கும் இடத்தில் இல்லை என்பதே அர்த்தம்.

08. வெற்றிக்கு இதய பூர்வமான முயற்சி தேவை. எந்தவொரு வேலையின் மீது உங்களுக்கு உண்மையான ஆழ்மன விருப்பம் இருக்கிறதோ அதை செய்யும்போது மட்டுமே உங்களால் விசுவாசமாக செயற்பட முடியும்.

09. எதுவுமே செய்யாது வெறுமனே சாப்பிடுவதும் தூங்குவதுமாக இருந்தால் உங்களுக்கே நீங்கள் நஞ்சு வைக்கிறீர்கள் என்று விளங்கிக் கொள்ளுங்கள்.

10. இலக்குகள் இருக்கும்போதுதான் ஆயுளும் நீடிக்கிறது. இலக்கும் அதை நோக்கிய இடையறாத செயற்பாடுமே நூற்றாண்டு வாழ்வின் சிறப்பம்சமாகும்.

11. இலாபம் வேண்டுமானால் நம்மில் நாம் முதலீடு செய்ய வேண்டும், முதலீடு இல்லாமல் இலாபம் கிடையாது.

12. உங்கள் பயணத்திற்கு தடை ஏற்பட்டால் கலங்க வேண்டாம், இலக்கை அடைய வேறொரு வழியில் செல்ல வேண்டுமென உங்களுக்கு வழிகாட்டுகிறது காலம் என்று புரியுங்கள்.

13. கல்வியில் முதலீடு செய்யுங்கள், யோசனையை தூண்டுகின்ற விடயங்களில் முதலிடுங்கள். மேலும் எது சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறதோ அதுவே கல்வி என்றும் உணருங்கள்..

14. வெற்றிக்கு மற்றவர் ஆதரவு தேவை, அதை பெறுவதற்கு நீங்கள் தலைமைப்பண்பை வளர்க்க வேண்டும்.

15. இலட்சியம், திறமை, உற்சாகம் மூன்றும் உங்களிடம் இருக்கிறதா போதும் வெற்றிக்கு வழி பிறந்துவிட்டதென புரியுங்கள்.

16. உங்கள் திட்டங்களை மற்றவர் ஏற்க வேண்டுமானால் முதலில் மற்றவர்களின் ஆர்வங்களை அறியுங்கள் அவர்கள் ஆர்வங்னளினூடாக சிந்தியுங்கள். அப்போதுதான் அது வெற்றி பெறும்.

17. நீங்கள் மிகச்சிறந்த தலைவராக வர விரும்பினால் எப்போதுமே மனிதாபிமான அணுகு முறைகளைக் கடைப்பிடியுங்கள்.

18. முற்போக்காக சிந்தியுங்கள். முற்போக்கு என்றால், ஒன்று நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலுமே மேம்பாடு இருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள், இரண்டு எல்லாவற்றிலும் உயர் தரங்கள் இருக்க வேண்டும் என்றும் சிந்தியுங்கள்.

19. எப்போதுமே முன்னேற்றத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். அதை நோக்கி உங்களை உந்தித் தள்ளுங்கள். அப்போது தான் இலட்சியங்கள் நிறைவேறும்.

20. விடா முயற்சியையும், புதுமைப்புனைவையும் ஒன்று சேருங்கள். ஒரு புதிய அணுகு முறையைப் பயன்படுத்தி புதிய காலடியை வையுங்கள்.

21. ஓர் அறிவாளி தன் மனதின் எஜமானனாக இருப்பான் ஒரு முட்டாள் அதன் அடிமையாக இருப்பான். இதில் நீங்கள் யார் என்பதை புரியுங்கள்.

அலைகள் பழமொழிகள் 01.01.2021

Related posts