உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 51

நம்மோடு இருக்கும் தேவன்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்,

அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23

பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற இயேசுகிறிஸ்த்து இவ்வுலகிற்கு மனிதனாக அவதரித்தார். அவர் ஒரு விசித்திரமான ஓர் மனிதனாக வரவில்லை. மாறாக அவர் ஒரு சாதாரண மனிதனாக உலகிற்கு வந்தார். அவருக்கு பெற்றோர், வீடு, குடும்பம்

என மனிதனுக்கு என்னென்ன தேவைப்பட்டதோ, அவையாவற்றையும் பெற்றுக் கொண்டார். அவையாவற்றையும் பிதாவாகிய தேவனே தெரிந்தெடுத்தார். இவை எல்லாவற்றையும்விட பிதாவாகிய தேவனே அவரின் பெயரையும் தெரிந்தெடுத்தார்.

அதை இயேசு பிறப்பதற்கு முன்னர் அவரின் தாயாருக்கு கணவனாக முன் குறித்திருந்த யோசேப்புக்கு கனவில் தெரியப்படுத்தினார். அவ்வாறு பிதாவாகிய தேவன் முன்அறிவித்த பெயரே இம்மானுவேல் என்பதாகும். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்பது அர்த்தமாம். இதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள மத்தேயு 1ம் அதிகாரத்தை வாசித்தால் மிகத்தெளிவாக விளங்கமுடியும்.

இயேசு பிறப்பதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் தேவனுடைய மக்கள் மிகப் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்தனர். அவர்களை ஆண்ட அரசர்கள் அவர்களை மிகவும் வேதனையிலும், துன்பத்திலும் அடக்கி ஆட்சிசெய்து வந்தனர். அந்தவேளையில் அவர்கள் தேவனை நோக்கி தங்களை ஆறுதல் படுத்தும்படி வேண்டினர். அப்போது தேவன் அவர்களுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தார். அந்த அடையாளந்தான் மேலேயுள்ள அந்த வார்த்தை. அதை நாம் ஏசாயா 7:14இல் பார்க்கலாம். ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார், இதோ, ஒருகன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இ;ம்மானுவேல் என்று பேரிடுவாள். தேவன் நம்மோடு (மக்களோடு) இருப்பார்.

ஏன் தேவன மக்களோடு இருக்க வேண்டும்? மக்களுடைய வேதனைகளை, சோதனைகளை அறிந்தவராக, உணர்ந்தவராக இருப்பதனால் துன்பப்படுகிற மக்களுக்கு ஆறுதலைக்கொடுக்க அவர் மக்களுடன் இருக்க வேண்டியதாகவுள்ளது. இந்த உலகத்தில் மனிதர்கள் சகமனிதர்களுக்கு கொடுக்கும் ஓர் உறுதிமொழி நான் உன்னுடன் இருப்பேன் என்பதாகும். ஆனால் அந்த உறுதிமொழி எவ்வளவு காலத்திற்கு? சிறிது காலத்தின் பின்னர் எல்லாம் மாயையைப்போல் மறைந்து விடும். ஆனால் தேவனின் இந்த உறுதிமொழி உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை என்பதாகும். இந்த உலக வாழ்க்கையில் மட்டுமன்றி மரணத்திலும், மரணத்தின் பின்னுள்ள நித்திய வாழ்விலும் நம்மோடு வருபவர் நமது ஆண்டவர் ஒருவர் மட்டுமே. அவர் நம்மோடு கூடஇருப்பதனால் அவர் நமது தனிமையையும், நமது வேதனையையும் அறிந்தவராக இருக்கிறார். எனவே நெருக்கங்கள் துன்பங்களுக்கூடாக நாம் போகும்போது தனித்துவிடப்படவில்லை என்று நினைவில் கொள்வோமாக.

நாம் மேலே பார்த்தோம் தேவன் ஒரு அடையாளத்தைக் கொடுத்தார் என்று. அந்த அடையாளம் நிறைவேற தேவன் ஒருகாலத்தையும் கொடுத்தார். அதை நாம் கலாத்தியர் 4:5இல் காணலாம். காலம் நிறைவேறினபோது, ஸ்திhPயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். காரணம் மக்களை அவர்களின் பாவங்கள் சாபங்களில் இருந்து விடுதலை செய்யும்படியாக தேவன் தமது அன்பை வெளிப்படுத்தினார். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16. அந்த அன்பின் வெளிப்பாடுதான் இயேசுவின் பிறப்பு.

தேவபிள்ளையே உன்னையும் என்னையும் படைத்த ஆண்டவர், நம்மைப் படைத்துவிட்டு நம்மைக்குறித்து அக்கறையற்றவராக இருக்கும் ஆண்டவரல்ல. ஆதியிலே உலகத் தோற்றத்திற்கு முன்னே அவர் நம்மோடு வாசம்பண்ணும்படிக்கு நம்மைத் தெரிந்து கொண்டார் என வேதம் கூறுகிறது. யேவான் 1:1,14 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

ஆதியிலே இயேசு வார்த்தையாக தேவனோடு இருந்தார். உரியகாலம் வந்தவுடன் அந்த வார்த்தை மாமிசமாகி உலகத்திற்கு வந்து நமக்குள்ளே வாசம்பண்ணினார் (கூட இருந்தார்). கிருபையினாலும் அதாவது அவருக்குள் ஞானம் அறிவு என்பவை களாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிப10ரணமெல்லாம் சாPரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. (சிருஸ்டிப்பின் தன்மைகள்- இல்லாமையிலிருந்து உருவாக்கும் தன்மை.) கொலேசியர் 2:3,9. இந்த தன்மைகள் அவருக்குள் இருக்கிறது. சங்கீதம் 45:2 இவ்வாறு கூறுகிறது. உம்முடைய உதடுகளில் அருள்பொழிகிறது. அதாவது வார்த்தையின் மேல் அதிகாரம் உள்ளது என்று.

இவ்வாறான தன்மைகொண்ட தேவன் நம்மோடே இருக்கிறார். காரணம் நம்மை இன்றைய தீமைகளில் அழிந்துபோகாமல் காத்துநடத்தும் படியாகவும், நித்திய ஜீவனைப்பெற்று தேவனோடு அநாதிகாலமும் வாழும்படியாகவும். இந்த அன்புகொண்ட, இரக்கமும் கிருபையும் உள்ள தேவன் வாசம்பண்ண உன் இருதயத்தை திறந்து கொடுப்பாயா. அவரின் பிறப்பைக்கொண்டாடுகிற நீ, கிறிஸ்து உன்னில் பிறக்க உன் இருதயத்தை தேவனுக்கு கொடு. அதுதான் உண்மையான கிறிஸ்து பிறப்பின் நாள்.

அன்பின் பரலோகபிதாவே, இன்று உமது பிறப்பின் நோக்கத்தை அறிந்து கொள்ளும் ஓர் வேளையை அலைகள் பத்திரிகையூடாக எனக்கு தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. நான் வாழவேண்டும் என்பதற்காக உமது ஒரேபோறான குமாரனை அர்ப்பணித்தீரே, அதை உணரச் செய்ததற்காக நன்றி அப்பா. இனிமேல் அதை உணர்ந்தவனாக வாழ தேவ ஆவியால் உதவி செய்து வழிநடத்தும் அப்பா. உமது அன்பு எவ்வளவு பெரிது என்பதை கிறிஸ்துவின் பிறப்பு எமக்கு காண்பிக்கிறபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது அன்பிற்குஈடாக என்னையே உமக்கு அர்ப்பணிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T: Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark

Related posts