அந்தகாரம் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் சாரிடம் அந்தகாரம் படக்குழு வாழ்த்துகளைப் பெற்றுள்ளது என்று இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார். இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக அந்தகாரம் என்கிற படத்தை வெளியிட்டுள்ளார்.

விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை – பிரதீப் குமார். அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 24-ல் நேரடியாக வெளியானது.

இந்நிலையில் அந்தகாரம் படக்குழுவினரை கமல் ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் . இச்சந்திப்பின் புகைப்படங்களைப் அட்லி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

கமல் ஹாசன் சாரிடம் அந்தகாரம் படக்குழு வாழ்த்துகளைப் பெற்றுள்ளது. எங்களுடன் எப்போதும் இருந்து ஆதரவளிப்பதற்கு நன்றி. புதிதாக ஒன்றைச் செய்ய உங்களுடைய வார்த்தைகள் ஊக்கமாக இருக்கும். லவ் யூ சார் என பதிவிட்டுள்ளார்.

Related posts