எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கேட்ட விஜய்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்து அவரது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்து அவரது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே 65-வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சம்பள பிரச்சினை காரணமாக விலகி விட்டார். விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் பேரரசு, மகிழ் திருமேனி, நெல்சன், மோகன் ராஜா, ஹரி உள்ளிட்டோர் உள்ளனர். பேரரசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேசினர். கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலமான நெல்சன் சொன்ன கதையும் விஜய்யை கவர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் புதிதாக எஸ்.ஜே.சூர்யாவிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் வெளியான குஷி படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை காதல், திகில், அதிரடி அம்சங்களுடன் இருந்ததாகவும் கதை விஜய்க்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் நடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

Related posts