சுரேன் ராகவன் இன்று பேசுவதை அன்றே செய்திருக்கலாம்

“சுரேன் ராகவன் எம்பி வடக்கு மாகாண அளுநராக இருந்தவர். இப்பொழுது பல விடயங்கள் பேசுகின்றார். குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுகின்றார். நீதி அமைச்சரை கேள்வி கேட்கின்றார். அவர் இதையெல்லாம் வடக்கு ஆளுநராக மைத்திரிபால சிறிசேனவின் ஆளாக இருந்த போது செய்திருக்கலாம். அதை விடுத்து இப்போது இன்னொரு ஆட்சி வந்த பிறகு பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.”

இவ்வாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிலித்தார். மேலும்,

“சுரேன் ராகவன் இந்த அரசாங்கத்தினுடைய நியமன எம்பி. எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலை பற்றி ஒரு எம்பி என்ற வகையில் அவர் பேசலாம். ஆனால் எங்களுடைய வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகளுடைய செயற்பாட்டை விமர்சிப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. அவர் அவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் தமிழர் என்பதால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பினை அவர் குறைத்துக் கொள்ளக்கூடாது.

அவர் எங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது. எங்களுடைய தலைவர்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்” – என்றார்.

Related posts