265 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்

மேல் மாகாணத்தில் நேற்று 265 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்- 19 பரவலைத் தடுப் பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 317 ஆகவும், சுய தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண் ணிக்கை 1447 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுய தனிமைப்படுத்தலை முடித்த அதிகாரிகளின் எண்ணிக்கை 23 ஆகவும், தற்போது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை 1424 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 36ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயது பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குறித்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மிக நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம், கொவிட்-19 காரணமான நியூமோனியா நிலை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுகாதாரத் துறையினால் மிக இலகுவாக கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என்றும் மக்களின் ஒத்துழைப்பே தேவை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொவிட் நோய்த்தொற்று ஒரு சுகாதார பிரச்சனையாகும். அதிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது சுகாதார சேவையினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக் கொண்டுள்ள எமது நாட்டின் வைத்தியர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் அதனை செய்ய முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி இன்று (09) முற்பகல் கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Related posts