தமிழகத்தில் வரும் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும்

தமிழகத்தில் வரும் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும்ம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வரும் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தங்களிடம் உள்ள திரைப்படங்களை திரையிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விபிஎப் கட்டணம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள்-தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளை அல்லது நாளை மறுநாள் தயாரிப்பாளர்கள் நல்ல முடிவை தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பத்தாம் தேதி திரையரங்குகளை திறக்க இருப்பதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Related posts