ஜேம்ஸ் பாண்ட் ஸீன் கொனரி மரணமடைந்தார்.. 90 வயது.

பிரபல ஆங்கிலத்திரைப்பட நடிகர் ஜேம்ஸ் பாண்ட் புகழ் ஸீன் கொனரி தனது 90 வது வயதில்
மரணமடைந்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் பி.பீ.சிக்கு தெரிவித்துள்ளனர்.

ஸ்கொட்லாண்டை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு காலத்தில் கொலிவூட் திரையுலகையே கலங்க வைத்தவர்.

இவருடைய 007 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் தொடர்ச்சி உலக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மொத்தம் 40 திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் ஒன்று ஆஸ்கார் விருதையும் வென்றது.

1999 ம் ஆண்டு பெண்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உலகின் சிறந்த செக்ஸ் ஆண் என்று கணிக்கப்பட்டிருந்தார்.

ஸ்கொட்லாந்து எடின்பரோ நகரத்தில் 1930 ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி பிறந்தார். தனது 90 வது பிறந்த நாளையும் கொண்டாடி விடைபெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை பார்க்காமலே விடை பெற்றுவிட்டார்.

அலைகள் 31.10.2020

Related posts