கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது: சரத்குமார்

கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல என்று சரத்குமார் கூறியுள்ளார்.

சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்கு பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும். அரசியல் ரீதியாக அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் உருவாகிவிடும் என்றும் சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியாகும் என்றும், படைப்பாளிகளின் முயற்சியை தடுக்க வேண்டாம் என்றும் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts