விசாரணையின் போது தீபிகா படுகோனே உடைந்து அழுதார்..?

போதைப்பொருள் விசாரணையின் போது நடிகை தீபிகா படுகோனே உடைந்து அழுததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குறித்து நடிகைகள் ரகுல்பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாராஅலிகான் ஆகியோரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர்,ராகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஆகியோரிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நடிகைகள் தீபிகா படுகோனேவிடம் மீண்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

தீபிகா படுகோனேவுடனான விசாரணையின் போது பாலிவுட் டாப் ஸ்டார் தீபிகா படுகோனே கண்ணீர் விட்டதாக கூற்றபடுகிறது அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷையும் ஏஜென்சி விசாரித்தது, விசாரணையின் போது, இருவரும் ஒன்றாக வறுத்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருள் நுகர்வு தொடர்பான கேள்விகளில், தீபிகா மற்றும் கரிஷ்மா இருவரும் தங்கள் வாட்ஸ் அப் அரட்டைகளின் குறியீடு மொழியில் கையால் சுருட்டப்பட்ட சிகரெட்டுகளைக் குறிப்பதாகக் கூறினர்.

நடிகை ஆரம்பத்தில் பதட்டமாக இருந்ததாகவும் சரியான பதில்களை அளிக்கவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 5 மணிநேர விசாரனையில் அவர் சில கேள்விகளுக்கு அமைதியாகிவிட்டார். சில கேல்விகளுக்கு அழுதார். சில முறை உணர்ச்சிவசப்பட்டார்.

இதற்கிடையில், கரிஷ்மா பிரகாஷ் விசாரணையில் தீபிகா போதைப்பொருள் தொடர்பான வாட்ஸ்அப் அரட்டை குழுவின் நிர்வாகி என்று கூறினார். அரட்டை குழுவில் நிர்வாக மேலாளர் ஜெயா சஹா, கரிஷ்மா பிரகாஷ், தீபிகா படுகோனே உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே இருந்தனர்.போதைப்பொருள் குறித்த வாட்ஸ்அப் குழு அரட்டை 2017 க்கு முந்தையது.

Related posts