மிகவும் கவலைக்கிடமாக உள்ள பாடகர் எஸ்.பி.பி.

மிகவும் கவலைக்கிடமாக உள்ள பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் எஸ்.பி.பி. மகன் சரணிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ள பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரபலங்கள் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி நடிகர்கள், பாடகர்கள், உள்ளிட்டோர் ஏராளமானோர் எஸ்.பி.பிக்காக வேண்டுதலை நடத்தி வருகின்றனர்.

Related posts