கங்கனா ரனாவத் தாகூர் பிரிவை சேர்ந்தவர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்‘தாகூர்’ பிரிவைசேர்ந்தவர் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் தெரிவித்து உள்ளார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கங்கனாவை சந்தித்து பேசினார். அப்போது மும்பை நகரத்தில் இருக்கும்போது அவர் பயப்படத் தேவையில்லை” என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில் காங்கிரசில் சேர பாஜகவை விட்டு வெளியேறிய உதித் ராஜ் கூறும் போது பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் சிறுமியும் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்களுக்கு பாதுகாப்பு கோரும் போது அவர்களுக்கு எந்த பாதுகப்பும் வழங்கப்படவில்லை.

Related posts