இந்தியாவில் இன்னும் 73 நாட்களில் கொரோனா தடுப்பூசி ?

இந்தியாவில் இன்னும் 73 நாட்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னணி நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ரஷ்யா தடுப்பூசியை உலக அளவில் முதல் நாடாக பதிவு செய்துவிட்டோம் எனக் கூறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் 3 வித தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன.

குறிப்பாக , ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள ‛கோவிஷீல்ட்’ தடுப்பூசி, 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என பிசினஸ் டுடே வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி இது குறித்து கூறும் போது, சிறப்பு தயாரிப்பு முன்னுரிமை உரிமையை அரசு அளித்துள்ளது. பரிசோதனைகளை விரைவாக நடத்தி 58 நாட்களில் முடிக்கப்படும். இறுதி கட்ட பரிசோதனையின் முதல் மருந்து (டோஸ்) சனிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 29 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் வழங்கப்படும். அடுத்த 15 நாட்களில் இறுதி முடிவுகள் கிடைக்கும். அதன் பிறகு தடுப்பு மருந்து வணிகமயமாக்கப்படும். ” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts