இலங்கையில் இன்று முக்கிய செய்தி தொகுப்பு : 13.08.2020 வியாழன்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (12) சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இந்த சந்திப்பு தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்கால அரசியல் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாக கூறினார். அத்துடன் ஆக்கப்பூர்வமான விடயங்கள்

கலந்துரையாடப்பட்டதாகவும் அரவிந்தகுமாரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களான வே.இராதாகிருஸ்ணன், பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுக்குமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார்.

——-

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பெயர் பட்டியல் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (12) மாலை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரீன் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திஸ்ஸ அத்தனாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

—–

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்கு ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் சில கட்சிகள் இதுவரையில் தங்களது தேசிய பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்யவில்லை.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பெயர் பட்டியல் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரீன் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திஸ்ஸ அத்தனாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் தொடர்பிலேயே அறிவிக்க வேண்டி உள்ளது.

Related posts