தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஜூலை மாதம் 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

——

நாடு முகங்கொடுத்துள்ள சுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. நாம் ஒரு பூகோள பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடமும் திறைசேரியிடமுமே உள்ளது. உலகின் பெரிய, சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள் இப்பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு பல்வேறு வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எமது மத்திய வங்கியிடமிருந்து அதற்கான எந்தவொரு நல்ல பதிற்குறியும் கிடைக்கப்பெறவில்லை. பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு செய்ய வேண்டியதை எவ்வித தாமதமுமின்றி எனக்கு அறியத் தாருங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Related posts