பணப் பங்கீட்டில் முண்டியடிப்பு 3 பெண்கள் பரிதாபகர மரணம்

மாளிகாவத்தை பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட பணப் பங்கீட்டின்போது ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள் மரணமடைந்துள்ளனர்.

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியிலுள்ள வீடொன்றிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பணப் பங்கீட்டின்போது திடீரென மக்கள் முண்டியடித்துள்ளனர். இதன்போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய 3 பெண்கள் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நெரிசலில் சிக்கிய மேலும் 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஜும்மா மஸ்ஜித் வீதியினூடாக கொழும்பிற்குள் நுழைதல் மற்றும் அங்கிருந்து வெளியேறுதல் ஆகியன தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts