மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

மனைவியினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (16) மாலை, பல்லம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியமடு, ஆடிகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவிக்கிடையிலான குடும்பத் தகராறு நீண்டுகொண்டு சென்றதன் காரணமாக, ஒரு கட்டத்தில் மனைவி, கணவனை பொல்லினால் தாக்கி இக்கொலை புரியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியமடு, ஆடிகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவியான குறித்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை இன்று (17) ஆனமடுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts