சென்னை சந்தையில் காய்கறி வாங்கிய 11 பேருக்கு கொரோனா

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை பெரியமேடு ஷ்ரிங்கர் தெருவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று கோயம்பேடு சந்தையில் இருந்து தஞ்சை சென்ற பழவியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts