தமிழ் புது வருட பிறப்பு; ஆளுநர், முதல் அமைச்சர் வாழ்த்து

தமிழ் புது வருட பிறப்புக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதல் அமைச்சர் பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

சார்வரி வருட பிறப்பினை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகமும், தமிழக மக்களும் வளமான எதிர்காலத்தை பெற்று முன்னேறி செல்ல வாழ்த்துகிறேன். நல்லிணக்கம், சகோதர உணர்வை கடைப்பிடித்து வளர்ச்சி மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிட உறுதிகொள்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு மலர்கின்ற இனிய நாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

தமிழர்களின் இல்லங்களில் நலமும், வளமும் பெருகட்டும். தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும் என்று தெரிவித்து உள்ளார்.

Related posts