கொரோனா; இரு பெண்கள் அடையாளம் 10 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்கள் இருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இத்தாலியிலிருந்து வந்த 56 வயதான பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 07ஆம் திகதி இலங்கை வந்த குறித்த பெண், தற்போது IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவரின் உறவினரான 17 வயது சிறுமிக்கு கொரோனா வைரஸ் இருப்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றிய 10 பேர் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts