இலங்கையில் தற்போது கொரோனா எண்ணிக்கை 07 ஆக உயர்ந்தது !

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 07ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 05பேர் நேற்று (13) பதிவாகியுள்ளனர். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இருவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 44 வயதுடையவர் என்பதோடு, தற்போது அவர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

43வயதுடைய மற்றைய நபர் நாத்தாண்டியா பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதோடு, அவர் குருணாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுமக்கள் பாரிய அளவில் ஒன்றுகூடும் நிகழ்வுகள் அல்லது அவ்வாறான நிலைமைகளுக்கு இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

—–

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் போலந்து பிரஜைகள் நால்வர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (14) காலை ரஷ்யாவிற்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து இவ்வாறு ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 04 பேரும் இலங்கைக்கு சுற்றுலாவிற்காக கடந்த மாதம் 26ஆம் திகதி வருகை தந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts