பொருத்தமானவர் கிடைத்ததும் திருமணம் -கேத்ரின் தெரசா

பொருத்தமான மணமகனுக்காக காத்து இருக்கிறேன் என்று நடிகை கேத்ரின் தெரசா கூறியுள்ளார்.

தமிழில் மெட்ராஸ், கதக்களி, கடம்பன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். மணமகன் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன். பொருத்தமான மணமகனுக்காக காத்து இருக்கிறேன். திருமணத்துக்கு முன்கூட்டியே திட்டமிடுவது எனக்கு பிடிக்காது. எனது வீட்டிலும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள்.

காதல் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதே நேரம் காதலிக்க ஏற்ற மாதிரியான ஆணை எனது வாழ்க்கையில் இதுவரை சந்திக்கவில்லை. காதல் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதை விளக்குவது கஷ்டம். நான் காதல் திருமணம் செய்து கொள்வேனா? அல்லது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேனா? என்பதை இப்போதே சொல்ல முடியாது. இரண்டு மூன்று கதாநாயகிகளுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. இந்தியில் நிறைய கதாநாயகர்கள், கதாநாயகிகள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். அதுபோல் தென்னிந்திய படங்களிலும் நடித்தால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது. எத்தனை பேர் நடித்தாலும் அவரவருக்குள்ள தனித்துவம் குறைந்து போய் விடாது.”

இவ்வாறு கேத்ரின் தெரசா கூறினார்.

Related posts