இந்தோனீசியாவில் குற்றவாளிக்கு கசையடி போட்ட முதலாவது பெண்மணி

இந்தோனீசியாவின் ஆர்ச் வட்டகையில் குற்றமிழைத்த பெண்னக்கு முகத்தை மறைத்த இன்னொரு பெண் கசையடி போட்டார். சாரியா சட்டங்களின் படி பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. முதற் தடவையாக ஒரு பெண் அதை நிறைவேற்றும் முறைமை இப்போதுதான் அமலுக்கு வந்துள்ளதால் இந்த விவகாரம் அதிக கவனயீர்ப்பு பெற்றுள்ளது.

தண்டிக்கப்பட்ட பெண்மணி முழந்தாளிட்டு இருந்தார். இப்பெண்மணி வெள்ளை நிற உடையால் போர்க்கப்பட்டிருந்தார். இவர் மீது கசையடி போட்டவர் முகத்தை மூடியபடி தவிட்டு நிறமான ஆடை அணிந்திருந்தார். இப்பெண்மணி அடிபோட அதை பலர் படம் பிடித்தார்கள்.

அங்குள்ள சாரியா சட்ட நடைமுறைக்கு மாறாக நடந்ததே குற்றமாகும். தண்டனை பெற்ற பெண்மணி ஒர் ஆணுடன் கோட்டல் அறை ஒன்றில் தங்கியதால் இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இப்படியான சாரியா சட்டத்தை அமல் செய்ய ஆர்ச் பகுதிக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது.

துனி மாநில அந்தஸ்த்துள்ள அவர்கள், இச்சட்டத்தை அமல் செய்யலாம் என்ற இணக்கப்பாட்டிற்கு 2005ம் ஆண்டு இந்தோனிசிய நடுவண் அரசு அனுமதி வழங்கியது. இதேவேளை முன்னர் ஆண்களே தண்டனை வழங்குவார்கள் இப்போது அதில் ஒரு மாற்றமாக பெண்களே பெண்களுக்கு தன்டனை வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த முடிவை இந்தோனீசியாவின்மதப் பிரிவு போலீசார் குர்ரானை அடியொற்றி எடுத்துள்ளார்கள்.

ஏதற்காக இந்த பகிரங்கமான தண்டனை என்ற கேள்விக்கு பதிலளித்த போலீசார் குற்றங்கள் குறைய வேண்டுமானால் இத்தகைய தண்டனைகளை பொது வெளியில் பகிரங்கமாக வழங்குவதே முறை என்கிறார்கள். அதேவேளை சிங்ப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வழங்கப்படுவதைப்போல காயம் ஏற்படுமளவுக்கு தாம் பாரிய தண்டனைகளை வழங்குவதில்லை என்கிறார்.

போலீஸ் தலைமை அதிகாரி சமிரியாடி (இந்தோனிசியாவில் ஒரு பெயர் மட்டுமே இருப்பது வழமை) பெண்களை இந்தப் பணிக்கு அமர்த்துவது கடினம் என்கிறார். ஏனென்றால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலமும், உறுதியும் வேண்டும். அதற்கான கடுமையான பயிற்சிகளை வழங்கிய பின்னரே இப்படியொருவர் தேர்வாகியிருக்கிறார். இதுவே ஆரம்பம் என்கிறார்.

மொத்தம்: எட்டுப் பேர்கள் கொண்ட மதரீதியான போலீசில் சுழர்ச்சி; முறை மூலமாக அன்றைய தினம் தண்டனை வழங்கும் பெண் தேர்வானார். ஆனால் தண்டனை வழங்குவது நினைப்பதைப் போல இலகுவான பணியல்ல. உளவியல் ரீதியாக மிக மிக கடினமான பணி.

உங்களில் யார் சுற்றவாளியோ அவரே முதலில் கல்லை வீசுங்கள் என்பது போன்ற ஒரு கடுமையான நிலையாகும். ஆனாலும் இதை செய்தே ஆகவேண்டும் ஏனென்றால் இது கடவுளின் கட்டளை என்கிறார்.

ஆர்ச் பகுதி இந்தோனிசியாவின் சுமாத்திரா பகுதியில் ஒரு சுயாட்சி உள்ள பகுதி, இங்கு 5.3 மில்லியன் மக்கள் உள்ளனர். விபச்சாரம், கள்ளத் தொடர்பு, ஒரு பால் சேர்க்கை, மது அருந்தல் போன்றன இங்கு தண்டனைக்குரிய பெரும் குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இந்தோனீசியாவே உலகத்தின் மிகப் பெரிய முஸ்லீம் குடித் தொகை கொண்ட நாடாகும். 272 மில்லியன் மக்களில் 235 மில்லியன் பேர் முஸ்லீம்களாகும். இந்தோனீசிய நடுவண் அரசால் இத்தகைய தண்டனையை தடுக்க இயலாது. ஆனால் மரண தண்டனை, கை வெட்டல் போன்ற பெரும் தண்டனைகளை தடுக்கும் வீட்டோ உரிமை நடுவண் அரசுக்கு இருக்கிறது.

இந்தத் தண்டனையானது மரபுக்கு மாறானது. பெண்களை கண்டனை வழங்கும் பணிக்கு கொண்டு வந்ததை மனித உரிமைகள் அமைப்பு கண்டித்தள்ளன.

அலைகள் 10.02.2020

Related posts