உலக வங்கி தொடர்ந்தும் இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி உறுதி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர் இந்த உறுதிமொழியை தெரிவித்துள்ளார். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்ததன் பின்னர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது தெற்காசியாவில் உயர் மனித அபிவிருத்தி சுட்டியுடன் கூடிய நடுத்தர வருமானம் பெறும் நாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவர் தனது விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி டபிள்யு.டி லக்ஷ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புதிய உள்நாட்டு மூலோபாயங்களை வகுப்பதிலும், அபிவிருத்தி பங்காளி என்ற வகையிலும் ஆதரவை வழங்கி, அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர தெரிவித்துள்ளதுடன் நிலையான அபிவிருத்திக்காக சுற்றுலாத்துறை மீது அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதையும் அவர் பாராட்டியுள்ளார்.

Related posts