சுதந்திர தின நிகழ்வு : ஜனாதிபதியின் முழுமையான உரை

72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வருகிறார்.

(09.25 AM) ஜனாதிபதி தனது உரையில்,

இலங்கை ஒற்றை ஆட்சியுடைய அரசாங்கமாகும். சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயக குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இன்றைய தினம் அரச தலைவர் என்ற வகையில் நீங்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதி பூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகிறேன். இந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்குமாக தன்னை அர்ப்பணித்த சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பேகர் ஆகிய தலைவர்களுக்கு தனது பெறு மதிப்பை செலுத்துகிறேன்.

இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமை உண்டு. அவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையும் சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையையும் தாம் எப்போதும் உறுதி செய்வோம். எந்தவொரு பிரஜைக்கும் தாம் விரும்பும் மதத்தினை வழிபடுவதற்கான உரிமையும் நாம் எப்போதும் மதிப்போம்.

தத்தமது நண்பர்களை தெரிவு செய்வது போன்று அமைதியான ஒன்று கூடலுக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு. இலங்கையின் பிரஜை ஒருவர் தான் தெரிவு செய்துக் கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அரசியல் செயல்பாட்டில் சம்பந்தபடும் உரிமையை நாம் எப்பொழுதும் பாதுகாப்போம்.

இவை அனைத்தும் எவராலும் சவால் விட முடியாத மனித உரிமைகள் என்றே கருதுகிறோம். ஜனநாயகத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் போது, எம்மால் சரிசமப்படத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. நிறைவேற்றுத் துறை, சட்டவாக்கத் துறை, மற்றும் நீதிமன்ற துறையானது அதன்போது மிக முக்கியமானது. அதிகார பரவலாக்கத்தின் போது, மத்திய அரசு மற்றும் பண்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களுக்கு இடையே சிறந்த உரிமைப்பாடு இருக்க வேண்டும்.

அரச தலைவர் என்ற வகையில் சேவைபுரியும் நோக்கு எனக்குள்ளது. ஜனாதிபதியாக இன, மத, கட்சி அல்லது வேறு பேதங்கள் இன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களையே நான் இன்று பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எந்தவொரு ஜனநாயக ரீதியிலான சமூகத்திலும் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், வலுவான நிறைவேற்றுத் துறைக்கும் சட்டவாக்க துறையும், அத்துடன் தன்னாதிக்கம் உள்ள நீதிமன்றமும் தேவைப்படுகின்றது.

ஒரு நாட்டின் இருப்புக்காக இன்றியமையாத இந்த முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் எந்த ஒரு வகையிலும் மக்களின் நம்பிக்கை சீர்கெடுமானால் அது ஒரு நாட்டின் அராஜகத்திற்கு காரணமாகும். ஆகையால் அனைத்து தரப்புக்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாட்டின் நலன் கருதியும் மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

தேசிய பாதுகாப்பை போன்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் நாங்கள் முக்கிய கவனம் செலுத்துவோம். பங்கரவாதத்திற்கு வழிவகைக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்த நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

நாடு பூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் இடையூறுகளில் இருந்து பிள்ளைகளை மீட்கும் வரை பெற்றோருக்கு சுதந்திரம் இல்லை.

அரச நிறுவனங்களினுள் ஊழல்கள் மோசடிகள் இருக்கும் வரையில் பொதுமக்களுக்கு சுதந்திரம் இல்லை. ஆகையால் இயல்பான மக்கள் வாழ்வுக்கு அழுத்தம் செலுத்துகின்ற அனைத்து இடையூறுகளையும் ஒழிப்பதற்காக சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த நடவடிக்கைகளை வினைத்திறன் ஆக்குவதற்கு தேவையான சீர்த்திருத்தங்களை தற்போது பாதுகாப்பு துறையினுள் ஆரம்பித்துள்ளோம்.

சிந்திக்கும் சுதந்திரத்தினையும் எழுதுவதற்கான சுதந்திரத்தினையும், நான் முழுமையாக உறுதிப்படுத்துவேன்.

அப்போது தான் தத்துவ ஞானிகள் போன்று உயர்மட்ட கலை ஆக்கங்களும் உருவாகும். உங்கள் மனசாட்சியின் படி செயற்படுமாறு நாங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் நாட்டை பற்றி சிந்தியுங்கள். ஏனைய சகோதர நாட்டு மக்களை பற்றி சிந்தியுங்கள். அரசியல் தேவைகளை பற்றி மட்டும் சிந்திக்காது உங்கள் செயல்களினாலும், சொற்களினாலும் நாட்டுக்கு தீமை ஏற்படுமா அல்லது நன்மை ஏற்படுமா என்று சிந்தித்து செயற்படுங்கள்.

வரலாற்றினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று மிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்த இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலத்திற்கு பிரார்த்திக்கிறேன். என்றார்.

Related posts