புதிய படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா?

விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர்.

விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது.

அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படத்தை கைவிட்டு விட்டனர். தற்போது புதிய கதையை தயார் செய்து விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார்.

அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் இணைவதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

விஜய் சேதுபதி தற்போது ‘லாபம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜனநாதன் இயக்கி உள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.

Related posts