பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஹாலிவுட் படங்களில்

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். தற்போது மீண்டும் 2 ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளன. பிரியங்கா சோப்ரா, மேட்ரிக்ஸ் 4-ம் பாகத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேட்ரிக்ஸ் படத்தின் முதல் பாகம் 1999-ல் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது.

படத்தில் இடம்பெற்ற அதிரடி சண்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. இதைத்தொடர்ந்து மேட்ரிக்ஸ்-2 மற்றும் 3-ம் பாகங்கள் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தின. தற்போது 4-ம் பாகத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. முந்தைய பாகங்களில் நடித்த கீனு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் ஆகியோர் மேட்ரிக்ஸ்-4 படத்திலும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. மேட்ரிக்ஸ் 4-ம் பாகத்தை அடுத்த வருடம் மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். வீ கேன் பி ஹீரோஸ், தி ஒயிட் டைகர், சிட்டடேல் ஆகிய ஹாலிவுட் இணையதள தொடர்களில் பிரியங்கா சோப்ரா தற்போது நடித்து வருகிறார்.

வின் டீசல் நடிக்கும் டிரிப்பிள் எக்ஸ் 4-ம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் பட வாய்ப்புகளை பிடிக்க பிரியங்கா சோப்ரா -தீபிகா படுகோனே இடையே போட்டி நிலவுகிறது.

Related posts