நடிகர் மற்றும் இசையமைப்பாளர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் டி.எஸ்.ராகவேந்திரா (75) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா உடல் நலகுறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 75. வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக அறிமுகம் ஆனவர் டி.எஸ். ராகவேந்திரா. அதன்பின் சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளராகவும் இருந்து உள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.எஸ்.ராகவேந்திரா இன்று மரணமடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினரையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதிச்சடங்குகள் இன்று மதியம் கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts