ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை!

இன்று (30) பிற்பகல் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று (29) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று மாலை 3 மணியளவில் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கட்சியில் உள்ள சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவருக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பும் நேற்று இரவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts