அலைகள் வாராந்த பழமொழிகள் 30.01.2020


01. ஒரு யோசனை பலனளிக்கக் கூடும் என்று உங்களுக்கு இலேசாக தெரிந்தால் கூட அதை பத்திரப்படுத்திக் கொள்ள தவறாதீர்கள்.

02. எதுவொன்றையும் படித்துவிடுங்கள்.. எல்லாக் கோணங்களையும் ஆய்வு செய்யுங்கள். பின்னர் காலம் கனியும்போது, அந்த யோசனையை உங்களுக்காகவும் உங்கள் எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்துங்கள்.

03. கட்டிடக்கலைஞன் தன் எண்ணத்தை பல கோணங்களில் வரைகிறான். அதன் பின் அதை விற்பனை செய்கிறான். யாரேனும் உங்கள் கற்பனை மிகு யோசனையை வாங்கியாக வேண்டும் இல்லையேல் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது.

04. உங்கள் யோசனைகளை விற்கத்தக்க வடிவில் வழங்குங்கள். மற்றவருக்கு ஒரு விடயம் விளங்கவில்லை என்றால் எத்தனை சிறப்பிருந்தாலும் விற்க முடியாது.

05. ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நம்புங்கள். நீங்கள் நம்பும்போது, அதை செய்வதற்கான வழிகளை மனம் கண்டு பிடிக்கும்.

06. எப்போதுமே ஒரு தீர்வு இருக்கிறதென நம்புவதே அத்தீர்வுக்கு வழி வகுக்கிறது.

07. சாத்தியமில்லை, என்னால் முடியாது, வேலைக்கு ஆகாது என்ற சொற்களையும், சொற் தொடர்களையும் மனதில் இருந்து நீக்கிவிடுங்கள்.

08. பாரம்பரியம் உங்கள் மனங்களை முடக்கிப்போட அனுமதிக்காதீர்கள். புதிய கருத்துக்களுக்கு திறந்த மனதுடன் அனுமதி கொடுங்கள். பரிநோதனை முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுங்கள்.

09. என்னால் மேலும் எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படி கேட்கும்போது ஆழமான விடைகள் உங்களுக்கு தோன்றும் கேட்டுப்பாருங்கள்.

10. நான் இன்னும் அதிகமான வேலைகளை எப்படி செய்வது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். திறன் என்பது ஒரு மனநிலை. எப்போதுமே செய்யும் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும், மேலும் புதிதாகவும் செய்யச் செய்ய மனமும் விரைவான, யுனிக்கான புதிய வழிகளை காட்டும்.

11. நீங்கள் செய்கின்ற வேலைகளை சிறப்பாக செய்வதும், அவற்றை அதிக அளவில் செய்வதும்தான் வியாபாரத்தில் வெற்றிக்கான சூத்திரமாகும்.

12. எப்போதுமே வேலையின் தரத்தை மேம்படுத்த வேண்டும், வேலையின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

13. மற்றவர்களிடம் அறிவுரை நாடுவதற்கும் அவற்றை காது கொடுத்து கேட்பதற்கும் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படி செய்யும்போது, ஆழமான தீர்மானங்களை எட்டுவதற்கான கச்சாப் பொருட்களை பெற்றுக் கொள்வீர்கள்.

14. பெரிய மனிதர்கள் காது கொடுத்து கேட்பதில் கவனம் செலுத்துகின்றனர். சிறிய மனிதர்கள் பேசுவதில் கவனம் செலுத்துகின்றனர் என்ற பழமொழியை எப்போதுமே கவனத்தில் கொள்ளுங்கள்.

15. உங்கள் மனதை விரிவுபடுத்துங்கள், உத்வேகம் பெறுங்கள். புதிய யோசனைகளையும், நல்ல விடயங்களையும் செய்வதற்கு உதவக்கூடியோருடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு சமூக ஆர்வங்களை கொண்டுள்ள மக்களுடன் கலந்து பழகுங்கள்.

16. மக்கள் சிலருடைய பேச்சுக்களை காது கொடுத்து கேட்பார்கள் சிலருடைய பேச்சுக்களை கேட்கமாட்டார்கள். உன்னித்து பார்த்தால் மக்கள் பெரிய வெற்றியாளர்கள் சொல்வதையே காது கொடுத்து கேட்பதை காண்பீர்கள்.

17. இவ்வாறு மனிதரோடு மனிதர் வித்தியாசப்பட என்ன காரணம்..? சிந்தனைதான் காரணம். நம்மில் நாம் எதை பார்க்கிறோமோ மற்றவர்களும் அதையே பார்க்கிறார்கள்.

18. நீங்கள் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதுதான் நீங்கள். நாம் எப்படி நடத்த தகுதியுடையவர்களாக இருக்கிறோமோ அந்த வகையிலேயே மற்றவர்கள் நம்மை நடத்துகிறார்கள்.

19. ஒருவன் எவ்வளவு கல்வி தகுதி பெற்றவனாக இருந்தாலும், தான் தாழ்ந்தவன் என்ற நினைப்பு அவனுக்கு இருந்தால், அவன் தாழ்ந்தவனாகத்தான் இருப்பான். ஏனெனில் சிந்தனைதான் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறது.

20. தான் தாழ்ந்தவன் என்று ஒருவன் நினைத்தால் தாழ்ந்தவனாகவே நடந்து கொள்வான். அவன் எவ்வளவு பெரிய வேடம் போட்டாலும் அவனால் இந்த உணர்வை மறைத்து வைக்க இயலாது. தான் முக்கியமானவன் அல்ல என்று நினைக்கும் ஒருவன் முக்கியமற்றவனாகவே போய்விடுகிறான்.

21. தான் தகுதி வாய்ந்தவன், உயர்ந்தவன் என்று நினைக்கும் ஒருவன் உயர்ந்தவனாகவே வாழ்கிறான். நாம் முக்கியமானவர்களாக இருக்க வேண்டும் என்றால், நாம் முக்கியமானவர்கள் என்ற எண்ணம் முதலில் நம்முள்ளாக மலர வேண்டும்.

22. நீங்கள் சிந்திக்கும் விதம்தான் உங்கள் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம்தான் மற்றவர்கள் உங்கள் முன் எப்படி எதிர்வினையாற்றுவர் என்பதைத் தீர்மானிக்கிறது.

23. உண்மையில் அடுத்தவருடைய நன் மதிப்பை பெறுவதும் ஓர் எளிய விடயம்தான். மற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டும் என்று எண்ணினால் முதலில் நீங்கள் மதிக்கப்பட தகுதியானவர் என்ற எண்ணம் உங்களில் மலர வேண்டும்.

24. தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவரை நீங்கள் மதிப்பீர்களா மதிக்க மாட்டீர்கள். ஏனென்றால் அவர் தன்னைத்தானே மதிப்பதில்லை பிறகு எதற்காக அவரை நீங்கள் மதிக்க வேண்டும். மாறாக நீங்களும் தாழ்வு மனப்பான்மை நோயால் பிடிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கும் மதிப்புக் கிடைக்காது.

25. எப்போதுமே சுய மதிப்பு என்பது நாம் செய்கின்ற எல்லா விடயங்களிலும் மிளிர வேண்டும். முதலில் முக்கியமானவர் போல தோன்றுங்கள் முக்கியமானவர் என்ற உணர்வு உங்களுக்குள் ஏற்பட அது உதவும்.

பழமொழிகள் தொடர்ந்தும் வரும்..
30.01.2020

Related posts