ரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) பிற்பகல் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு நுகேகொட மேலதிக நீதவான் எச்.யூ.கே. பெல்பொலகே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கும் உத்தரவை வழங்கினார்.

நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் பிடியாணை பெற்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சட்ட மாஅதிபரினால் CCD பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய கடந்த ஜனவரி 14ஆம் திகதி பிற்பகல், மாதிவெலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் (CCD) அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts