சீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்

அனைத்து நேரடி விமான சேவைகளையும் பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

சீனாவில் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டின் அத்தியாவசிய பயணம் தவிர்ந்த ஏனைய பயணங்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சீனாவுக்கு எந்தவித நேரடி விமான சேவையும் இடம்பெறாது என, பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் தமது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

Related posts