விறுவிறுப்பாக நடக்கும் – விஜய், அஜித் படப்பிடிப்புகள்

விஜய், அஜித் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜய் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது அவருக்கு 64-வது படம்.

டெல்லியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பை பின்னர் சென்னை பூந்தமல்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு மாற்றினர்.

தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகின்றனர். விஜய்யுடன் கதாநாயகியாக மாளவிகா மோகனன், சஞ்சிவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது விஜய் சேதுபதியும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

படப்பிடிப்புக்கு வந்த அவரை திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஒரு ரசிகர் தனக்கு பிறந்த நாள் என்று கூற அவருக்கு விஜய் சேதுபதி கேக் ஊட்டி விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. விஜய் படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

அஜித் படத்துக்கு வலிமை என்று பெயரிட்டுள்ளனர். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஸ்டுடியோவுக்கு மாற்றி உள்ளனர். பெரிய அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.

Related posts