சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்

சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2019-ம் ஆண்டில் கூடுதல் வருமானம் ஈட்டியவர்கள் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டுவைன் ராக் ஜான்சன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடப்பு ஆண்டில் வாங்கிய சம்பளம் ரூ.636 கோடி.

இரண்டாம் இடத்தை அவெஞ்சர்ஸ் படத்தில் தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிரிஸ் ஜெம்ஸ்வர்த் பெற்றுள்ளார். இந்த ஆண்டு இவர் சம்பாதித்த தொகை ரூ.543 கோடி ஆகும். அயன்மேன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக உள்ள ராபர்ட் டவுனி ரூ.469 கோடி சம்பளம் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த பட்டியலில் இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் இடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டில் ரூ.462 கோடி சம்பாதித்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் ரூ.412 கோடி வருவாய் ஈட்டி 5-வது இடத்தில் இருக்கிறார்.

பிராட்லி கூப்பர் ரூ.405 கோடி சம்பளம் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறார். இதே தொகையை சம்பாதித்து ஆடம் சாண்ட்லர் 7-வது இடத்தில் இருக்கிறார். கிறிஸ் எவன்ஸ் ரூ.309 கோடி சம்பளம் வாங்கி 8-வது இடத்தில் இருக்கிறார்.

பால்ரட் ரூ.291 கோடி சம்பளத்துடன் 9-வது இடத்திலும், வில் ஸ்மித் ரூ.249 கோடி சம்பளத்துடன் 10-ம் இடத்திலும் உள்ளனர்.

Related posts