திரிஷாவின் சொகுசு கார்கள்!


தமிழ் பட கதாநாயகிகளில், முதல் வரிசையில் இருப்பவர், திரிஷா.
நாற்பது வயதை தொடப்போகும் இவரை இன்னமும ரசிகர்கள், ‘கனவுக்கன்னி’யாகவே கருதி வருகிறார்கள். அவருடைய ஒல்லியான உடற்கட்டும், சதை போடாத முகவசீகரமும் மார்க்கெட்டை உச்சத்தில் வைத்து இருக்கிறது.

திரிஷாவுக்கு நாய்களை எவ்வளவு பிடிக்கிறதோ, அவ்வளவுக்கு சொகுசு கார்களையும் பிடிக்குமாம். அவர் வீட்டில் எப்போதுமே 3 சொகுசு கார்கள் நிற்கும். அதில் ஒன்று பி.எம்.டபிள்யூ. இன்னொன்று பென்ஸ். மற்றொன்று, ஜாகுவார்.

அந்த மூன்று கார்களில், ‘லேட்டஸ்ட்’ ஆக வாங்கிய கார், ஜாகுவார்!

Related posts