நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பேன்: சஜித்

நாட்டில் மீண்டும் ஏகாதிபத்தியம் நிறைந்த ஒரு குடும்ப அரசியலுக்கு நாம் வழிகொடுக்க மாட்டோம் என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சகோதரத்துவத்துடன் நாட்டை நாம் கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை அழுத்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றிருந்தது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, மதவாதம்,ஏகாதிபத்தியம் நிறைந்த ஒரு ஆட்சியை மீண்டும் ஒரு முறை நாட்டில் இடம்பெற நாங்கள் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. ரணசிங்க பிரேமதாச ஒரு போதும் மக்களிடையே ஜாதி பேதம் பார்ப்பதில்லை அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து முன்னோக்கி செலவதே அவரின் ஆசை,அவர் நாட்டிற்கு செய்த அபிவிருத்திகளை போல் தொடர்ந்தும் நாட்டிற்கு நான் அபிவிருத்திகளை செய்வேன்.

அத்தோடு, கோவில்கள்,பள்ளிகள் தேவாலயங்கள் என்பவற்றை உடைத்து பௌத்த மத தலங்கள் அமைப்பது பௌத்த மதத்திற்கு அவர்கள் செய்யும் முன்னேற்றம் என கருதுகின்றனர். மக்கள் எவரும் முட்டாள்கள் அல்ல நாட்டின் நிலைமையை அறிந்தவர்கள் மீண்டும் ஒரு கருப்பு ஜூலையை விரும்ப மாட்டார்கள்.

மோசடி அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு முறை வழி செய்யாமல் நல்லாட்சிக்கு வழி செய்ய ஐ.தே.கவுடன் இணையுங்கள் என்றும் இதன் போது அவர் தெரிவித்துள்ளார்.

Related posts