நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே..

நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே என பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்தார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமது பிறந்த நாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பல பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதன் புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகின. நயன்தாராவின் இந்தக் கொண்டாட்டம்
தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே.

இனிமையான பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நன்றி என் தங்கமே. ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்த நாளில் என்னுடன் இருந்த
அனைத்து அன்பார்ந்த நண்பர்களுக்கும் நன்றி என கூறி உள்ளார்.

Related posts