பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை…

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர் இன்று(05)நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.

பலாலி விமான நிலையத்தின் விமான போக்குவரத்து ஆரம்ப சேவைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.அதற்காக அபிவிருத்திப்பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

விமான நிலைய அபிவிருத்தியின்போது,ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த அபிவிருத்திப் பணிகளை பார்வையிட கொழும்பில் இருந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் இன்று காலை பலாலிக்கு வருகை தந்தனர்.

அவர்களுடன் வந்த குழுவில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி ஆகியோர் அடங்குகின்றனர்.

Related posts