தற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

கமல்ஹாசன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சக போட்டியாளர்கள் கொடுத்த தொல்லையால் மன அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து மதுமிதாவை வெளியேற்றினர். மேடையில் மதுமிதாவை அழைத்து கமல் ஹாசன் பேசியதாவது:-

“நீங்கள் செய்த இந்த காரியம் எனக்கும், மற்றவர் களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. போட்டியாளர்களின் தைரியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை சோதிப்பதுதான் இந்த போட்டி. ஆனால் உங்கள் கையில் நீங்கள் ஏற்படுத்திருக்கும் காயம் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணம் அல்ல.

நீங்கள் செய்த இந்த காரியத்தில் நிரூபிக்கப்பட்டது உங்களது கெட்டிக்கார தனமா? முட்டாள் தனமா?. உங்களிடம் நான் வாதாட வரவில்லை. இத்தகைய செயலுக்கு மதுமிதா முன் உதாரணமாக இருந்திருக்கக் கூடாது. தன்னை துன்புறுத்திக்கொள்ளும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.

இந்த நிகழ்ச்சியை அனைத்து வயதினரும் பார்த்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு எந்தவிதமான பதட்டத்தையோ, தவறான முன் உதாரணத்தையோ நாம் கொடுத்து விடக்கூடாது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதுபோல் மதுமிதாவை தற்கொலை முயற்சிக்கு தூண்டியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுமா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Related posts