உலகின் மிக அழகான ஆண் : சாதனை அல்ல

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அண்மையில் உலகின் மிக அழகான மனிதர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கும் போட்டி ஒன்றை நடத்தியது. இதற்காக நடந்த வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் எவான்ஸ், ராபர்ட் பேட்டின்சன், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்கள் பலரையும் தோற்கடித்து இந்த பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

இந்த மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஹிருத்திக் ரோஷனுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களையும்ம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஹிருதிக் ரோஷன் கூறும்போது, ​இது ‘ப்ரோக்கோலி’யின் விளைவு, சும்மா நான் இது கேலிக்காக கூறினேன். பட்டத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் உண்மையில் ஒரு பெரிய சாதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை, இந்த உலகில் ஒருவர் விரும்பும் மற்றும் மதிக்க வேண்டிய ஏதாவது இருந்தால், அது அவர்களின் தன்மையே ஆகும். உங்களின் நல்ல குணம் எப்போதும் உங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் என கூறினார்.

Related posts