வடமாகாணத்தில் 245 இந்து ஆலயங்களை புனரமைக்க நிதியுதவி

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் இந்து ஆலயங்கள், இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் என்பவற்றை வலுப்படுத்தும் “தெய்வீகச் சேவை” திட்டத்தின் கீழ் வடமாகாண இந்து ஆலயங்களின் புனரமைப்பிற்காக நிதியுதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் மண்டபத்தில் நாளை காலை 9.30மணிக்கு இடம்பெறவுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் வட மாகாணத்திலுள்ள 245 ஆலயங்களை புனரமைக்க நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts