இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 13.07.2019

கிளிநொச்சியில், பூநகரி – பரந்தன் வீதியில் இன்று (13) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரிப்பர் வாகனமும், சிறிய வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சிறிய வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

—–

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்தான விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (12) காலை 6.00மணியிலிருந்து இன்று (13) காலை 6.00மணி வரையான 24மணித்தியாலத்திற்குள் மது போதையில் காணப்பட்ட 260சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, கடந்த 05ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் காணப்பட்ட 2,540சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

—–

அரச நிறுவனங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் 03மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாணைக் குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

—-

உயிரத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தெரிவுக்குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உள்ளிட்ட ஏனைய விசாரணைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் பதவியேற்க தீர்மானித்தால் அதற்கு எதிராக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கூட்டாக அமைச்சுப்பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் பதவியேற்றக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சு பதவியேற்பதில் ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை எம்.பிக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts